Saturday, December 28, 2013

Run for Yourself

இன்று (29/12/2013) "Run for Yourself" (உங்களுக்காக ஓடுங்கள்) என்ற ஒரு மினி மாரத்தான் பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் சென்னை மெரீனாவில் நடைபெற்றது. இது உடல் நலத்தின் முக்கியத்தை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.

இதில் என் மகன் கோகுலும் சிறுவர்களுக்கான (12 வயது முதல் 16 வயது வரை) பிரிவில் கலந்து கொண்டான்.  மொத்த தூரம் 3 கிலோ மீட்டர்.  இவன் ஓடி முடிப்பதற்குள் எனக்கு மூச்சு வாங்கி விட்டது (வேறோண்டுமில்லை நானும் கூடவே ஓடினேன்).

ஆனாலும் என் 12 வயது  மகன் முதலாவதாக வந்து விட்டான்.  அவசரப்பட்டு வாயை பிளக்காதிர்கள்.  அவனுக்கு முன்னால் 250 பேர் ஓடி 251 வது நபராக வந்து சேர்ந்தான் (வந்து சோர்ந்தான் என்பது பொருத்தமாக இருக்கும்). இருந்தாலும் 2000 பேருக்கு மேல் கலந்து கொண்ட போட்டியில் 251 வது இடமும் மதிப்புக்குரிய சாதனைதான் (என் மகன் என்பதால் மட்டுமல்ல) .   15 வயது 16 வயது சிறுவர்களுடன் 12 வயது சிறுவர்களும் போட்டி போட்டு ஓடியது, அதே போல் 60 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களும் உற்சாகமாக ஓடியதும் பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

நமக்காக ஓடுவோம், தினமும் ஓடுவோம் - வாழ்க்கையின் ஓரத்திற்கு ஓடாமல் கடற்கரை ஓரமும் சாலை ஓரமும் ஓடுவோம்.  நம் உடல் நலன் காப்போம்.

Let us Run for Ourselves.   
Friday, December 27, 2013

Welcome 2014

Like every day, every New Year comes with a big Hope. 

At the end of every day we look back the day to see whether it was a bitter or better day.  In most of the days it is neither bitter nor better and generally in between bitter and better.  Only a very few days give us the sense of pride and satisfaction of the day.

But the story of dawn is different.  Every dawn gives us the Hope - the hope of making the day better and better and sometimes, even better than the best.

Unfortunately, as the day progresses, by habit, we do the same mistakes and commit the same blunders and look back the day with helpless (or hopeless) position.  That is the reason, many of us don’t even look back what had happened during the day (hope you agree with me).

As every day comes with hope, every year comes with a BIG HOPE.  At the beginning of the year, we put lot of resolutions – from possible tasks like waking up at a particular time (in the morning ??), regular exercise, good diet, etc. to impossible tasks (?) like keeping the spouse happy at all times, getting good name from everyone, etc.  But at the end of the year we come back to square one (??).  

If we are able to count most of our days with pride and satisfaction, then the year that goes by would give us a sense of accomplishment and we can really look forward with greater hope and faith.  For this to happen we need to come out of the clutches of our own habits.  Osho says, “Any habit that becomes a force, a dominating force over you, is a sin. One should live more in freedom. One should be able to do things not according to habits but according to the situations”.

Michael Altshuler puts it, “the bad news is time flies. The good news is you’re the pilot”.  As a Pilot let’s  make the most of our valuable time and see every day and every year a successful and joyful one.

Wishing everyone a healthy, wealthy, happy and prosperous NEW YEAR 2014.


Bye Dear 2013

நன்றி 2013. எல்லோருக்கும்  எப்படியோ, எனக்கு சற்று  அதிகமாக அன்பை காட்டிய வருடம் 2013.

நீண்ட நாள் கனவு இல்லம், கனவிலும் நினைக்காத கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை (இதைப் பற்றி விரிவாக பின்னர் பகிர்கிறேன்), இப்படி நிறைய மகிழ்ச்சித்  தருணங்களை அள்ளித் தெளித்திருக்கிறது 2013. மீண்டும் உனக்கு நன்றி 2013.

2013 ன் நல்ல தருணங்கள் 2014 ன் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நம்பிக்கையுடன் வரவேற்கிறேன் புத்தாண்டை.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Thursday, December 26, 2013

Modi Vs. Rahul

மோதியை  எப்படியாவது பிரதமராக்கும் காங்கிரசின் கனவுத்திட்டம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் ஆக்கியது.

Wednesday, December 25, 2013

பகுத்தறிவு

பகுத்தறிவு

ஆடி மாசம் அம்மனுக்கு
ஆடு  வெட்டி படைக்க வேண்டும்
இல்லையென்றால் சாமி குற்றம்
ஆகிவிடும் என்று சொன்ன தந்தையிடம்
மகள் சொன்னாள்
சாமி குற்றம் ஆனாலும் பரவாயில்லை
மிருக குற்றம் ஆகாமல் இருந்தால் சரி.

Tuesday, December 24, 2013

டாஸ்மாக் சிந்தனைகள்

நண்பர  திரு வேடியப்பன் (Discovery Book Palace) அவர்கள் டாஸ்மாக் சிந்தனைகள் என்று அவ்வப் போது சில கருத்துக்களை தன்னுடைய வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.  மதுவுக்கு எதிரான   பிரச்சாரத்தை நய்யண்டிதனமாக செய்து வருகிறார். 

இதை ஒரு புத்தகமாக திரு  வைகோ அல்லது திரு தமிழருவி மணியன் அவர்கள் தலைமையில்  வெளியிடவும் விருப்பம் தெருவித்தார்.

அவர் விருப்பம் நல்ல முறையில் "தள்ளாடாமல்" நிறைவேற நம் வாழ்த்துக்கள். 

Wednesday, December 11, 2013

Bharathiyar Birthdayஎண்ணிய முடிதல் வேண்டும், 
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெறிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!


இன்று (11/12/2013) மகாகவி பாரதியாரின் பிறந்த நாள். கட்அவுட் வைத்து கொண்டாட ரசிகர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாரதி உன்னை தினமும் எங்கோ யாரோ இந்த உலகம் முழுவதும் கொண்டாடி கொண்டுதான் இருக்கிறார்கள்.  அந்த யாரோ ஒருவரில் நானும் ஒருவன்.