Wednesday, January 29, 2014

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி


நானும் என் மனைவியும் சில சமயங்களில்  TV யில் பழைய பாடல்களை போட்டு விட்டு பேசி கொண்டிருப்போம்.  நாங்கள் பேசுவதை கேட்காமல்  TV யில் நாயகனும் நாயகியும் பாடிக்  கொண்டிருப்பார்கள். அவர்கள் பாடுவதை கேட்காமல் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். எங்களையும் TV யையும் கண்டுகொள்ளாமல் எங்கள் பிள்ளைகள் படித்துக் கொண்டிருப்பார்கள் (என்ற ஒரு நம்பிக்கைதான்!!).

ஒரு நாள் எங்கள் பேச்சு சுவாரசியத்தையும் மீறி ஒரு பாடல் எங்கள் காதையும் மனதையும் நிறைத்தது.  அந்தப் பாடல் பாச மலர் படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்தான்.

"மலர்ந்தும்  மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடியும் விடியாத காலைப்  பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே".

கண்ணதாசனின் கவிதை வரிகளில் தமிழ் மொழி கொஞ்சி விளையாடுகிறது.

சத்தியமாக இன்றைய "why this கொலவெறி" இளசுகள் மேலே குறிபிட்டுள்ள பாடலுக்கு சரியாக அர்த்தம் புரிந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.

முடிந்தவரை நம் தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு சேர்க்க நம்மால் இயன்றதைச்  செய்ய வேண்டும்  என்ற எண்ணம் தோன்றியது..



Sunday, January 26, 2014

The Alchemist

The Alchemist

I have just read the book “The Alchemist” – a fable about following one’s dream – written by Paulo Coelho.

This is a story of a shepherd boy, who was travelling different places in pursuit of his dream.  More than the story, I was fascinated by the simple thoughts spread throughout the book which are worth contemplating.  Truth remains the same, in whatever language it is written.

Here are a few such thoughts:

“It’s the possibility of having a dream come true that makes the life interesting”.

“it’s the simple things in life that are the most extraordinary; only wise men are able to understand them”.

“Everyone seems to have a clear idea of how other people should lead their lives, but none about his or her own”.

“At certain point in our lives, we lose control of what’s happening to us, and our lives become controlled by fate.  That’s the world’s greatest lie”.

“Better be alone with one’s books.  They tell their incredible stories at the time when you want to hear them.  But when you are talking to people, they say some things that are so strange that you don’t know how to continue the conversation”.

“And, when you want something, all the universe conspires in helping you to achieve it”.

“If you start out by promising what you don’t even have yet, you will lose your desire to work toward getting it”.

“Sometimes it’s better to leave things as they are”.

“People fail to recognize the good things that happen in their lives every day that the sun rises”.

“There is a force that wants you to realize your destiny; it whets your appetite with a taste of success”.

“God has prepared a path for everyone to follow.  You just have to read the omens that he left for you”.

“If you can, try to make your own decisions”.

“Don’t forget that everything you deal with is only one thing and nothing else.  And don’t forget the language of omens. And, above all, don’t forget to follow your destiny through to its conclusion”.

“The secret of happiness is to see all the marvels of the world, and never forget the drops of oil on the spoon”.

“A shepherd may like to travel, but he should never forget about his sheep”.

“Whoever has money is never really alone”.

“I am like everyone else – I see the world in terms of what I would like to see happen, not what actually does”.

 “There must be a language that doesn’t depend on words.  If I can learn to understand this language without words, I can learn to understand the world”.

“And both you and I needed to cleanse our minds of negative thoughts”.

“I have been told that beauty is the great seducer of men”.  

“Every blessing ignored is a curse”.

“Never stop dreaming – Follow the omens”.

“Making a decision was only the beginning of things.  When someone makes a decision, he is really diving into a strong current that will carry him to places he had never dreamed of when he first made the decision”.

“People need not fear the unknown, if they are capable of achieving what they need and want”.

“We are afraid of losing what we have, whether it’s our life or our possessions and property.  But this fear evaporates when we understand that our life stories and the history of the world were written by the same hand”.

“Everything on the face of the earth had a soul, whether mineral, vegetable, or animal – or even just a simple thought”.

“All things are the manifestation of one thing only”.

“Everyone has his or her own way of learning things”.

“I don’t live in either my past or my future.  I am interested only in the present.  If you can concentrate always on the present, you will be a happy man”.

“Life will be a party for you, a grand festival, because life is the moment, we are living right now”.

“Don’t’ be impatient.  Eat when it’s time to eat.  And move along when it’s time to move along”.

“When you are in love, things make even more sense”.

“He tried to deal with the concept of love as distinct from possession, and could not separate them”.

“Each day, in itself, brings with it an eternity”.

“Courage is the quality most essential to understanding the language of the world”.

“It’s not what enters men’s mouth that’s evil. It’s what comes out of their mouths that is”.
  
“You must understand that love never keeps a man from pursuing his destiny.  If he abandons that pursuit, it’s because it was not true love ….. the love that speaks the Language of the World”.

“Listen to your heart.  It knows all things, because it came from the Soul of the World, and it will one day return there”.

“All people who are happy have God within them”.

“Very few follow the path laid out for them – the path to their destinies, and to happiness.  Most people see the world as a threatening place, and, because they do, the world turns out, indeed to be a threatening place”.

“Every search begins with beginner’s luck.  And every search ends with the victor’s being severely tested”.

“The darkest hour of the night came just before the dawn”.

“Your eyes show the strength of your soul”.

“Men have never understood the words of the wise”.

“When something evolves, everything around that thing evolves as well”.

“It’s not often that money saves a person’s life”.

“There is only one thing that makes a dream impossible to achieve: the fear of failure”.

“Usually the threat of death makes people a lot more aware of their lives”.

“The world we live in will be either better or worse, depending on whether we become better or worse”.

“When we love, we always strive to become better than we are”.

“Everything that happens once can never happen again.  But everything that happens twice will surely happen a third time”.

“It’s true; life really is generous to those who pursue their destiny”.

திட்டமிடு தொட்டுவிடு

திட்டமிடு தொட்டுவிடு

நேற்று கிருஷ்ணா கான  சபாவில் மரபின் மைந்தன் முத்தையாவின் "நமது நம்பிக்கை" மாத இதழின் சென்னை பதிப்பினை முன்னிட்டு "திட்டமிடு தொட்டுவிடு" என்ற தலைப்பில் ஒரு விழா நடைபெற்றது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரு சுகி சிவம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

திரு காந்தி அவர்கள் சுருக்கமாகவும் அழகாகவும் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.  தான் பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போதும் பல முறை தேர்வுகளில் தவறினாலும் ஒருபோதும் நேரம் தவறியது இல்லை என்று குறிப்பிட்டார்.  ஒருமுறை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கால தாமதமாக வந்த விழாவிலும் அவருக்காக காத்து கொண்டிராமல் குறித்த நேரத்தில் விழாவினை ஆரம்பித்ததையும் நினைவு கூர்ந்தார்.

அதே போல திரு சுகி சிவம் பேசும் போதும் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.  AVM  திரு சரவணன் ஒரு முறை திரு ராம ராவ் (NTR) அவர்களை சந்திக்க நேரம் கேட்ட பொது அவர் 4 மணிக்கு சந்திக்கலாம் என்று கூறியிருக்கிறார். திரு சரவணன் மாலை 4 மணி நினைத்திருக்கிறார். பிறகுதான் தெரிந்தது அது மாலை அல்ல காலை 4 மணி என்று. (நம்மில் பலருக்கு காலை 4 மணி என்பது கிட்டத்தட்ட mid  நைட்??)

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.  வாழ்வில் உச்சத்தினை அடைந்தவர்கள் அனைவரும் நேரத்தின் அருமையை உணர்ந்தவர் என்பது.

"நமது நம்பிக்கை" சென்னையில் சிறப்பாக வலம் வர மரபின் மைந்தன் முத்தையாவிற்கு நமது  வாழ்த்துக்கள்.
  

Tuesday, January 14, 2014

பொங்கலோ பொங்கல்



பொங்கல் லீவில் இந்த வேலையை முடிக்கலாம் அந்த வேலையை முடிக்கலாம் என்று மனதுக்குள் பட்டியல் போட்டு படுத்தேன்.

ஆனால் காலை எழுந்து கண் விழித்தது என்னவோ தொலைக்காட்சி பெட்டி முன்புதான்.  பட்டி மன்றங்கள், வெட்டி மன்றங்கள், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படங்கள்  முதல் திரைக்கே வராத படங்கள் வரை சேனல் மாற்றி மாற்றி பார்த்ததில் கண் வலித்ததுதான் மிச்சம்.  லிஸ்டில் ஒரு வேலை கூட ஆகவில்லை.

சில ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை சீனியர் நட்சத்திரங்களுக்கும் சில்லறை நட்சத்திரங்களுக்கும் செலவு செய்து விளம்பரங்களின் மூலம் கோடி கோடியாய் வருமானம் ஈட்டிய சேனல்களின் ஒரே முதலீடு நம்மை போன்ற பொழுது போக்கிகள்தான்.

உருப்படியாக நடந்த ஒரே விஷயம் எல்லா நண்பர்களுக்கும் ஒரே வாழ்த்தை forward செய்து, வாழ்த்து அனுப்பிய எல்லோருக்கும் ஒரே நன்றியை reply செய்ததுதான்.

நாளையாவது என் லிஸ்டை கவனிக்கிறேன்.

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்.

Saturday, January 11, 2014

Salutations to Swami Vivekananda and Maharishi Mahesh Yogi

சுவாமி விவேகானந்தரும் மகரிஷி மகேஷ் யோகியும் 

இன்று (12/01/2014) இந்தியாவில் பிறந்து உலகில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டிய இரு ஞான சூரியன்களின் பிறந்த நாள்.

சுவாமி விவேகானந்தரைப்  பற்றி விளக்கம் தேவையில்லை.  நாம் எல்லோருக்கும்  நன்கு தெரிந்த காவியுடை காவிய நாயகன் விவேகானந்தர்.   ஆனாலும் மகரிஷி மகேஷ் யோகி பரவலாக அறியப்பட்டிருந்தாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை.  ஆனால் இந்த வெள்ளுடை வேந்தரும் ஆன்மிக சக்தியால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் கொண்டுவர முடியும் என்று முயற்சி செய்து அதில் வெற்றியும் அடைந்தவர்.

இன்று யோகா, தியானம் போன்றவை பெரும்பாலான மக்களின் காபி, டீ பழக்கத்தை போல சாதாரண விஷயங்கலாகிவிட்டது.  ஆனால் சுமார் 50 - 60 வருடங்களுக்கு முன்பே "ஆழ்நிலை தியானம்" என்ற பெயரில் பதஞ்சலி யோக சூத்திரத்தை பாமரருக்கும் கொண்டு சென்றவர் இவர்.

இவருக்கும் சுவாமி விவேகந்தருக்கும் உள்ள சில அடிப்படை ஒற்றுமைகள் :

1) இருவருமே தங்கள் குருவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள் மட்டுமல்ல. இருவருமே தங்கள் குருவின் முழு ஆசியை பெற்றவர்கள்.

2) இருவருமே சமுதாய வளர்ச்சியும் ஆன்மிக வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தது என்பதை உணர்ந்து செயல்பட்டவர்கள்.  நாடெங்கிலும் உள்ள ராமகிருஷ்ண மடங்களும், மகரிஷி வித்யா மந்திர் பள்ளிகளுமே இதற்கு சாட்சி.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆழ்நிலை தியானம் கற்றுக்கொள்ள விரும்பிய போது என் அப்பா, நான் ஏதோ சாமியாராகிவிடுவேன் (?) என்ற பயத்தில் சற்று தயங்கினார்.  ஒருவேளை  இப்போதைய சில சாமியார்களின் வசதி வாய்ப்பையும் அவர்கள் வாழ்க்கையை அனுபவிப்பதியையும் (??)  பற்றி தெரிந்திருந்தால் சற்று தயங்கியிருக்க மாட்டார் (அதிகமாக பயந்திருப்பார்!!).

ஆன்மிகமும் வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில்  சுவாமி விவேகானந்தரும் மகரிஷி மகேஷ் யோகியும் உண்மையில் நாம் என்றும் வணங்கத்தக்க ஆன்மீக பொக்கிஷங்கள்.

சுவாமி விவேகானந்தரையும், மகரிஷி மகேஷ் யோகியையும் நினைக்கும் இந்த நாளில் நான் என்றும் வணங்கும் ரமண மகரிஷியையும் தியானித்துக் கொள்கிறேன்.


   



 




Sunday, January 5, 2014

Pixel - Mummy

நேற்று (4/01/2014) பிரசாத் preview  அரங்கில் சி.ஜெ. ராஜ்குமார் எழுதி Discovery Book Palace பதிப்பித்த "பிக்சல்" வெளியீட்டூ  விழா நடைபெற்றது.  இது ஒளிப்பதிவு சம்பந்தப்பட்ட நூல்.

இவ்விழாவில் ஓளிப்பதிவாளர் இயக்குனர் திரு பாலு மகேந்திரா, எஸ்.எ. சந்திரசேகர் மற்றும் சமீப கால வெற்றி பட இயக்குனர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவை ஈரோடு திரு மகேஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

திரு பாலு மகேந்திரா பேச்சில் வயதின் காரணமாக சற்று தடுமாற்றம் இருந்தாலும் கருத்தின் ஆழத்தில் குறைவில்லை.  அவருடைய பேச்சு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாகவே அமைந்தது என்றால் அது மிகை இல்லை.

இந்த விழாவில் என்னை கவர்ந்த ஒரு விஷயம் தமிழில் பழக்கத்தில் உள்ள பிற மொழிச் சொற்களை அப்படியே எடுத்துக்கொள்ளலாமா அல்லது எல்லாவற்றையும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமா என்ற விவாதம்தான். அவர்கள் பேச்சின் மையக் கருத்தாக அமைந்தது தேவையான இடங்களில் பிற மொழிச் சொற்களை அப்படியே எடுத்துக் கொள்ளலாம், கஷ்டப்பட்டு மொழி மாற்றம் செய்யத் தேவையில்லை என்பதுதான்.

எனக்கும் இந்தக் கருத்தில் முழு உடன்பாடுதான். ஆங்கில மொழி, இலத்தின், கிரேக்க, பிரெஞ்சு போன்ற மொழிகளில் இருந்து பெற்ற சொற்களில் இருந்துதான் இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.     ஆனால் நாம் தமிழை வாழ வைக்கிறோம் என்ற பெயரில் எல்லாவற்றையும் தமிழ்ப் படுத்துவதால்தான் தமிழ் இன்றைய தலைமுறையிடம் இருந்து விலகிக்கொண்டிருக்கிறது.

உதாரணமாக கம்ப்யூட்டர் என்பதை கணினி என்று மொழி பெயர்த்திருக்கிறோம். இதாவது பரவாயில்லை. லேப்டாப் என்பதை மடிக்கணினி என்று கூறுகிறோம்.  இப்போதெல்லாம் ஆங்கில வார்த்தைகளை டைப்  செய்தால் கம்ப்யூட்டர்  தானாகவே மொழி மாற்றம் செய்து தமிழில் கொடுத்துவிடுகிறது.  ஆனால் கொஞ்சம் அசந்தால் தவறான வார்த்தைகள் வந்து விடக்கூடும்.  என்னுடைய மடிக்கணினி சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கு பதிலாக என்னுடைய மடிக்கன்னி சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள் வந்துவிடக்கூடும்.  இன்றைய தலைமுறையினருக்கு பெரும்பாலும் தமிழில் ஆழமான சொல் வளம் இல்லாததால் எது சரியான வார்த்தை என்பதில் கூட சந்தேகம் வரலாம்.

'பிக்சல்' என்ற வார்த்தை Picture Element என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம். இதை எப்படி அல்லது ஏன் மொழி மாற்றம் செய்ய வேண்டும்.  அதே போல் கேமரா, ஷட்டர் போன்ற சொற்கள்.

அதனால் காலத்திற்கு ஏற்ப தமிழை வளர்ப்போம்.

நிகழ்ச்சியில் திரு மகேஷ் அவர்கள் அம்மாக்கள் தங்களை மம்மி என்று அழைக்க விரும்புவதை கலாய்த்தார்.  மம்மி என்றால் பதப்படுத்தப்பட்ட பிணம் என்று பொருள் என்று திரு பாலு மகேந்திரா கூறினார்.

இனி யாராவது தங்களை மம்மி என்று அழைக்க வேண்டும் என்று விரும்பினால் எகிப்து மம்மியை நினைத்து கொண்டு ஆசைப்படலாம்.