கடந்த 20 நாட்களாக நிறைய கல்யாண வைபவங்கள். எல்லா விருந்துகளிலும் கிட்டத் தட்ட ஒரே மாதிரியான menu. இலை நிறைய அயிட்டங்களை (items - தவறாக நினைத்து விடாதீர்கள்) பார்த்தாலே வயிறு நிரம்பி விடுகிறது (நான் என்னைச் சொன்னேன்).
அதிலும் சாப்பாட்டு விசயத்தில் நான் கொஞ்சம் slow (சாப்பாட்டு விசயத்தில் மட்டுமா என்று கேட்டு விடாதீர்கள்). நான் சாம்பாரில் கை வைக்கும்போதே பக்கத்து இலைகாரர், yeh dhil maange மோரில் இருப்பார். நான் ரசத்திற்கு வரும்போது மோர்காரர், கை கழுவிக் கொண்டிருப்பார். அதற்குள் இலை எடுப்பவர் பக்கத்து இலை வரை மடித்து பேப்பரை 'சர்' என்று கிழிக்கும்போது தெறித்து விழும் சில பருக்கைகள் போதும் எழுந்திரு என்று சொல்லாமல் சொல்லும். அதுவும் தவிர இப்போதெல்லாம் வெட்கமே இல்லாமல் நாமோ அல்லது மற்றவர்களோ அடுத்தவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் பின்னால் போய் நின்று விடுகிறோம். அதிலும் பின்னால் நிற்கும் சிலர் தெரியாதது போல தெரிந்தே நம் chair ஐ இடித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் சாப்பிடும்போது பெரும்பாலும் குப்பையில் கொட்டுவது போல எல்லா அயிட்டங்களையும் வயிற்றில் கொட்டிவிடுகிறோம்.
எதற்கு இத்தனை அயிட்டங்களை பரிமாற வேண்டும் எனக் கேட்டால், ஒன்றுமில்லாதவனே ஓஹோ என்று செய்யும் போது நாம் இதைக் கூட செய்யவில்லை என்றால் நம்மை ஊர் என்ன சொல்லும் என்று நம்மை திருப்பிக் கேட்பார்கள். அதுவும் உண்மைதான். பல சமயங்களில் நாம் ஊருக்காகதான் சில விசயங்களை செய்ய வேண்டி இருக்கிறது (அல்லது செய்யாமல் இருக்க வேண்டி இருக்கிறது).
அதே சமயத்தில் இப்படி உணவு விரயமாவதைத் தவிர்த்தால் எல்லோருக்கும் நல்லது. Buffet சிஸ்டம் ஓரளவுக்கு ஓகே. ஆனால் அதையும் நம்ம ஆட்கள் எல்லோரும் விரும்புவதில்லை.
ஒரு சின்ன யோசனை எனக்கும் என் மனைவிக்கும் தோன்றியது. நாம் தாம்பூலப் பையில் ஒரு சின்ன box வைத்து அதை சாப்பிடும்போதே கொடுத்து விடலாம். Sweet, Cutlet போன்ற dry dish-களை, அப்போது சாப்பிட விரும்பாதவர்கள் அந்த box இல் வைத்து வீட்டிற்குச் சென்று பொறுமையாகச் சாப்பிடலாம்.
ஆனால் இதிலும் ஒரு அபாயம் இருக்கிறது. நம்மில் சில பேர் இலையிலும் போடு boxசிலும் போடு என்று அடம் பிடித்தால், இரண்டாவது பந்தியிலேயே இலையில் வைப்பதற்கு ஒன்றும் இல்லாமல் .போகக்கூடும்.
இருந்தாலும் எதையாவது செய்து விரயத்தை தவிர்ப்போம். கொஞ்சம் சிந்திக்கலாம்.