இந்த கொரோனா காலம் நான் வாங்கி வைத்திருந்து படிக்காமல் இருந்த நிறைய புத்தகங்களை வாசிப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
அப்படி ரொம்ப நாளாக படிக்க நினைத்த ஒரு புத்தகம் "Letters of Swami Vivekananda" (சுவாமி விவேகானந்தரின் கடிதங்கள்) என்ற புத்தகம். 1940-ம் ஆண்டு முதன்முதலில் பதிப்பிக்கக்பட்ட இந்த புத்தகம், சுவாமி விவேகானந்தர் தன்னுடைய நண்பர்களுக்கும் சீடர்களுக்கும் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களின் தொகுப்பு. இந்த தொகுப்பில் மொத்தம் 228 கடிதங்கள் உள்ளன.
இந்தப் புத்தகத்தை படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணம் ஒன்றுதான். நேர விரயங்களைத் தவிர்த்து செயல்பட்டுக் கொண்டே இருந்தால் நம்மால் ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களை செய்ய முடியும் என்பதுதான். நாம்தான் தேவைக்கு அதிகமாக நம்மை பரபரப்பாக்கிக் கொண்டு தேவையான விஷயங்களை கவனிக்கத் தவறி விடுகிறோமா என்று தோன்றுகிறது.
மனிதன் தான் வாழ்ந்த சுமார் 39 வருடங்களில் எவ்வளவு செய்திருக்கிறார். "கர்ம யோகி" என்று அவரை அழைப்பதன் முழு அர்த்தத்தை இந்தப் புத்தகத்தை படித்தவுடன் புரிந்து கொண்டேன்.
இந்து மதத்தினை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் அல்லது கண்மூடித் தனமாக எதிர்ப்பவர்கள் - இரு சாரரும் அவர் சொன்னதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருந்தால், இப்போது நிலவும் பரஸ்பர வெறுப்பு அரசியலுக்கு இடம் இருக்காது. தன்னை வழிபடுவதைவிட தன்னுடைய எண்ணங்களை செயல்படுத்துவத்தைதான் தான் விரும்புவதாக அவரே குறிப்பிடுகிறார். ஆனால் நாம் கிருஷ்ண ஜெயந்தி என்பதுபோல் விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடிவிட்டு அவர் சொன்னதை மறந்து விட்டு நமக்குள் அடித்துக் கொள்கிறோம்.
அவர் யாருக்கு எழுதிய எந்தக் கடிதமாக இருந்தாலும் அதில் நம்மை inspire செய்யும் ஏதோ சில வரிகள் கட்டாயம் இருக்கும். அவர் உச்சானிக் கொம்பில் அமர்ந்து கொண்டு நமக்கு அறிவுரை கூறுவதில்லை. சக நண்பராக இருந்து கொண்டு அன்பாகவும், ஆழமாகவும் சில சமயங்களில் ஆவேசமாகவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
அவர் 1900-ம் ஆண்டு பாரிஸில் இருந்து தன்னுடைய சீடர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தின் முக்கிய அம்சங்களை இந்தப் பதிவில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம் இந்தக் கடிதத்தினை விவேகானந்தர் அவர்கள் french மொழியில் எழுதி அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.
விவேகானந்தர் 1902-ம் ஆண்டு காலமானார். அவர் காலமாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தன வாழ்க்கையின் இலட்சியம் நிறைவேறி விட்டதாக குறிப்பிடுகிறார். நூறு வயது வாழ்ந்தவர்கள் கூட செய்யாத செயல்களை 40 வயதுக்குள் செய்துவிட்டு, அவர் மறைந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் நம் நினைவில் இருப்பவர் இன்னமும் பல நூறு ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறவர்.
அந்தக் கடிதத்தின் சாரம்.
என் அன்பிற்கினிய கிறிஸ்டினா, உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கடவுள் உன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தொடர்ந்த பிரார்த்தனை.
உன்னுடைய அழகும் அமைதியும் நிறைந்த கடிதம் நான் அடிக்கடி இழந்து கொண்டிருக்கும் புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
நான் இப்போது மகிழ்ச்சியாக - உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். துன்ப மேகங்கள் என்னை முழுமையாக நீங்கி விடவில்லை. சில சமயங்களில் மீண்டும் அது வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் என்னை பாதிக்கும் அளவுக்கு இப்போது அதற்கு வீரியம் இல்லை.
நான் இப்போது புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் எம். ஜூல்ஸ் போய்ஸ் (M. Jules Bois) என்பவரின் விருந்தினராக இருக்கின்றேன். எழுத்தை மட்டுமே நம்பி வாழ்வதால் அவர் பணக்காரர் கிடையாது. அனால் எங்கள் இருவருக்கும் இடையில் நிறைய சீரிய சிந்தனைகள் பொதுவாக இருக்கிறது. அதனால் அவருடன் இருப்பதை நான் மகிழ்வாக கருதுகிறேன்.
அமெரிக்காவில் நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் இந்தியாவிற்கு அனுப்புகிறேன். நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன் - முன்பை போலவே அடுத்த வேளை உணவைக் கூட இரந்து உண்ணும் சாதுவாக. மடத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருந்தும் விலகி விட்டேன். என்னை அழுத்திக் கொண்டிருந்த சுமையில் இருந்து விடுதலை செய்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். நான் இப்போது படபடப்பாகவும் பலவீனமாகவும் உணர்கிறேன். விடியல் வந்ததும் தன்னுடைய கூட்டில் தூங்கிக் கொண்டிருந்த பறவைகள் விழித்தெழுந்து நீல வானத்தை நோக்கி சிறகடித்து பறந்து செல்வதைப் போல, என்னுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தை உணர்கிறேன்.
நான் வாழ்வில் பல கஷ்டங்களையும், சில மிகப் பெரிய வெற்றிகளையும் அடைந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய எல்லா கஷ்டங்களும் துன்பங்களும் நான் அடைந்த வெற்றிக்கு முன் ஒன்றுமே இல்லை. நான் என்னுடைய குறிக்கோளை அடைந்து விட்டேன். நான் எந்த முத்தை அடைவதற்க்காக வாழ்க்கை என்னும் கடலில் குதித்தேனோ அதை கண்டு கொண்டேன். எனக்கான வெகுமதி கிடைத்து விட்டது. நான் மிகவும் நிறைவாக உணர்கிறேன்.
என்னுடைய வாழ்வின் அடுத்த அத்தியாயம் தொடங்குவதாக உணர்கிறேன். என்னுடைய தாய் என்னை இனிமேல் மிகவும் மென்மையாக வழி நடத்துவாள் என்று நினைக்கிறன். இனி நான் இடைஞ்சல்கள் நிறைந்த கரடு முரடான பாதையில் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை - பறவைகளின் இறகுகள் நிறைந்து மென்மையானதாக என்னுடைய பாதைகள் இனி இருக்கும். நான் சொல்வது உனக்கு புரிகிறதா ? நம்பு - நான் சொல்வதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதுவரையிலான வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்தது என்னவென்றால், நான் எதை மிகவும் ஆழமாக தேடினேனோ அது எப்போதும் எனக்கு கிடைத்திருக்கிறது. சில சமயங்களில் நிறைய போராட்டத்திற்குப் பிறகு - அதனால் என்ன ? நாம் விரும்பியதை அடையும்போது நாம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து விடுகின்றன. நீயும் உன்னுடைய வாழ்வில் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் - கவலைப்படாதே உனக்கான வெகுமதியும் கண்டிப்பாக கிடைக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய ஊழ்வினை என்னும் மேகம் விலகி மறைந்து கொண்டிருக்கிறது. என்னுடைய நற்செயல்களின் விளைவுகள் என்னும் சூரியன் - மிகவும் அழகாக, பிரகாசமாக, வலிமையுடன் உதயமாகிக் கொண்டிருக்கிறான். நான் சொல்வது உனக்கும் பொருந்தும். நான் உனக்கு என்னுடைய இதயபூர்வமாக சொல்ல நினைப்பதை இந்த மொழியில் என்னால் முழுமையாக சொல்ல முடியவில்லை. ஆனால் இதயத்தின் வார்த்தைகளை எந்த மொழியில்தான் சொல்ல முடியும். (சுவாமி விவேகானந்தர் இதுவரை இந்த கடிதத்தை பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது)
அதனால் எழுத்தின் மூலம் என்னுடைய எண்ணத்தினை வெளிப்படுத்தும் முயற்சியை கைவிட்டு, என்னுடைய எண்ணங்கள் மிகவும் மென்மையாக, நேசமுடன், உன்னுடைய இதயத்தில் ஒளிரும் வகையில் இதயபூர்வமாக வெளிப்படுத்துகிறேன். குட் நைட்.
உன் உண்மை நண்பன்
விவேகானந்தா
Original Letter
6 Place Des Etats Unis, Paris
14th
October, 1900.
God bless you at each step, my dear Christine, such is
my constant prayer!
Your letter, so beautiful and so calm, has given me
that fresh energy which I am often losing.
I am happy, yes, I am happy, but the cloud has not
left me entirely. It sometimes comes back, unfortunately, but it no longer has the
morbidity it used to have.
I am staying with a famous French writer, M. Jules
Bois. I am his guest. As he is a man making his living with his pen, he is not
rich; but we have many great ideas in common and feel happy together.
He discovered me a few years ago and has already
translated some of my pamphlets into French. We shall in the end find what we
are looking for, isn't it?
Thus, I shall travel with Madame Calve, Miss MacLeod,
and M. Jules Bois. I shall be the guest of Madame Calve, the famous singer. We
shall go to Constantinople, the Near East, Greece, and Egypt. On our way back,
we shall visit Venice.
It may be that I shall give a few lectures in Paris
after my return, but they will be in English with an interpreter. I have no
time any more, nor the power to study a new language at my age. I am an old
man, isn't it?
Mrs. Funke is ill. I think she works too hard. She
already had some nervous trouble. I hope she will soon be well.
I am sending all the money I earned in America to
India. Now I am free, the begging-monk as before. I have also resigned from the
Presidentship of the Monastery. Thank God, I am free! It is no more for me to
carry such a responsibility. I am so nervous and so weak. "As the birds which have slept in the
branches of a tree wake up, singing when the dawn comes, and soar up into the
deep blue sky, so is the end of my life."
I have had many difficulties, and also some very great
successes. But all my difficulties and suffering count for nothing, as I have
succeeded. I have attained my aim. I have found the pearl for which I dived
into the ocean of life. I have been rewarded. I am pleased.
Thus it seems to me that a new chapter of my life is
opening. It seems to me that Mother will now lead me slowly and softly. No more
effort on roads full of obstacles, now it is the bed prepared with birds' down. Do you understand that? Believe me, I feel quite
sure.
The experience of all my life, up to now, has taught
me, thank God, that I always find what I am looking for with eagerness.
Sometimes it is after much suffering, but it does not matter! All is forgotten
in the softness of the reward. You are also going through troubles, my friend,
but you shall have your reward. Alas! What you now find is not a reward but an
additional affliction.
As to myself, I see the cloud lifting, vanishing, the
cloud of my bad Karma. And the sun of my good Karma rises--shining, beautiful,
and powerful. This will also be the case for you, my friend. My knowledge of
this language has not the power to express my emotion. But which language can
really do so? (It seems upto this
part he has written in French).
So I drop it, leaving it to your heart to clothe my
thought with a soft, loving, and shining language. Good night, gute Nacht !
Your devoted friend,
Vivekananda.