The full meaning of the proverb "Man is master of his own destiny" is beautifully explained by Maharishi Mahesh Yogi in the following words:
The bad influence of the past Karma is something beyond the control of the doer. The best the doer can do in the present in order to neutralise the influence of past Karma is to engage in the practice of Transcendental Meditation, which will readily raise the consciousness of the doer and produce favourable influence in the surroundings; when the consciousness is raised, energy and intelligence are increased. Then, whatever is the influence of the past, that influence will not be able to nullify present action. Certainly the influence of the past Karma will be there, but it may not completely guide the destiny of the present action.
If a businessman loses five hundred dollars, the loss is a loss for all times. Although this loss will always remain a loss, if two thousand dollars are earned the next day, the gain overshadows the loss.
This is how, by due amount of performance of Transcendental Meditation, supplemented with the power of charity and virtuous deeds of helping others, the negative influences of the past Karma can be counteracted in order to smooth the path of the present Karma. And then the action will be performed without resistance or obstacles, yielding maximum results.
Excerpts from Maharishi's Science of Being and Art of Living
"மனிதன் தன்னுடைய சொந்த விதிக்கு தானே எஜமானன்" என்ற பழமொழிக்கான விளக்கத்தை மஹரிஷி அவர்கள் மிகவும் அருமையாக பின்வருமாறு விளக்கியுள்ளார்:
தன்னுடைய பழைய கர்மாவின் விளைவுகளில் அல்லது பாதிப்புக்களில் இருந்து விடுபடுவது என்பது மனிதனின் சக்திக்கு மீறிய செயலாகும். அதிகபட்சம் நம்மால் செய்யக்கூடியதெல்லாம் பழைய கர்மாவின் பாதிப்புக்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் செயலை இப்போது செய்வதுதான். அப்படியான ஒரு பாதுகாப்புக் கவசம்தான் "ஆழ்நிலைத் தியானம்". ஆழ்நிலைத் தியானம் செய்யும் போது நம்முடைய விழிப்புணர்வு நிலை மேலோங்கி நமக்கு ஒரு சாதகமான சூழ்நிலை நம்மைச் சுற்றி உருவாகும். அப்படி நம்முடைய விழிப்புணர்வு நிலை மேலோங்கும்போது நம்முடைய அறிவும், ஆற்றலும் அதிகரிக்கும். அந்த நிலையில் நமது பழைய கர்மாவின் பாதிப்புக்கள் அல்லது விளைவுகள் இன்றும் தொடர்ந்தாலும் கண்டிப்பாக அதனால் நாம் பாதிக்கப்படுவது பெருமளவு குறைந்து விடும் அல்லது பழைய கர்மாவின் விளைவுகள் நம்முடைய இன்றைய வாழ்க்கையை பாதிக்காத அளவில் நம்மால் செயலாற்ற முடியும்.
உதாரணமாக, ஒருவருக்கு தன்னுடைய தொழிலில் 50,000 ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்த நஷ்டம் நஷ்டம்தான். அதை மாற்ற முடியாது. ஆனால் நஷ்டம் ஏற்பட்ட மறுநாளே அவருக்கு அவருடைய தொழிலில் இரண்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருக்கு அந்த 50,000 ரூபாய் நஷ்டம் எந்தவகைகளிலும் பெரிதாக பாதிக்காது. அதாவது பழைய நஷ்டத்தை விட இன்றைய லாபம் பலமடங்கு என்பதால் நாம் அந்த பழைய நஷடம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டோம்.
எனவே, நாம் தொடர்ந்த ஆழ்நிலைத் தியான பயிற்சி மூலமும், நம்முடைய தான தரும காரியங்கள் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் நம்முடைய நற்செயல்கள் மூலமும் பழைய கர்மாவின் எதிர்மறை பாதிப்புக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு மட்டும் இல்லாமல், அதன் பாதிப்புக்கள் நாம் தற்போது செய்யும் செயல்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்படுத்தாமல் நமக்கு அதிகபட்ச வெற்றியைப் பெற்றுத் தரும்.
மகரிஷி "by due amount of performance of Transcendental Meditation, supplemented with the power of charity and virtuous deeds of helping others" என்று சொல்வதின் பொருள் - மருத்துவர் நம் நோய் சீக்கிரம் தீர மருந்து மாத்திரைகள் கொடுப்பதுடன் சில வைட்டமின் மாத்திரைகளையும், சில குறிப்பிட்ட உணவுகளையும் பரிந்துரைப்பார். நம்முடைய பழைய வினை என்னும் நோய் சீக்கிரம் தீர மகரிஷி பரிந்துரைக்கும் மருந்துதான் "ஆழ்நிலைத் தியான பயிற்சி". தான தரும காரியங்கள் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் நற்செயல்கள் என்பது மகரிஷி நமக்கு பரிந்துரைக்கும் வைட்டமின் மாத்திரைகளும், சில குறிப்பிட்ட உணவுகளும்.
ஆனால் நம்முடைய பிரச்சனை என்னவென்றால், நாம் இழந்ததை நினைத்தே அதிகம் கவலைப் பட்டுக்கொண்டிருப்போம். நமக்கு கிடைத்த நல்ல விஷயங்களை நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்ல மாட்டோம். அதனால்தான் பழைய "கருமங்களிலேயே" விழுந்து கிடக்கிறோம்.
Let us count our blessings and become the Master of our own Destiny.