Sunday, January 26, 2014

திட்டமிடு தொட்டுவிடு

திட்டமிடு தொட்டுவிடு

நேற்று கிருஷ்ணா கான  சபாவில் மரபின் மைந்தன் முத்தையாவின் "நமது நம்பிக்கை" மாத இதழின் சென்னை பதிப்பினை முன்னிட்டு "திட்டமிடு தொட்டுவிடு" என்ற தலைப்பில் ஒரு விழா நடைபெற்றது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரு சுகி சிவம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

திரு காந்தி அவர்கள் சுருக்கமாகவும் அழகாகவும் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.  தான் பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போதும் பல முறை தேர்வுகளில் தவறினாலும் ஒருபோதும் நேரம் தவறியது இல்லை என்று குறிப்பிட்டார்.  ஒருமுறை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கால தாமதமாக வந்த விழாவிலும் அவருக்காக காத்து கொண்டிராமல் குறித்த நேரத்தில் விழாவினை ஆரம்பித்ததையும் நினைவு கூர்ந்தார்.

அதே போல திரு சுகி சிவம் பேசும் போதும் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.  AVM  திரு சரவணன் ஒரு முறை திரு ராம ராவ் (NTR) அவர்களை சந்திக்க நேரம் கேட்ட பொது அவர் 4 மணிக்கு சந்திக்கலாம் என்று கூறியிருக்கிறார். திரு சரவணன் மாலை 4 மணி நினைத்திருக்கிறார். பிறகுதான் தெரிந்தது அது மாலை அல்ல காலை 4 மணி என்று. (நம்மில் பலருக்கு காலை 4 மணி என்பது கிட்டத்தட்ட mid  நைட்??)

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.  வாழ்வில் உச்சத்தினை அடைந்தவர்கள் அனைவரும் நேரத்தின் அருமையை உணர்ந்தவர் என்பது.

"நமது நம்பிக்கை" சென்னையில் சிறப்பாக வலம் வர மரபின் மைந்தன் முத்தையாவிற்கு நமது  வாழ்த்துக்கள்.
  

No comments:

Post a Comment