Sunday, January 5, 2014

Pixel - Mummy

நேற்று (4/01/2014) பிரசாத் preview  அரங்கில் சி.ஜெ. ராஜ்குமார் எழுதி Discovery Book Palace பதிப்பித்த "பிக்சல்" வெளியீட்டூ  விழா நடைபெற்றது.  இது ஒளிப்பதிவு சம்பந்தப்பட்ட நூல்.

இவ்விழாவில் ஓளிப்பதிவாளர் இயக்குனர் திரு பாலு மகேந்திரா, எஸ்.எ. சந்திரசேகர் மற்றும் சமீப கால வெற்றி பட இயக்குனர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவை ஈரோடு திரு மகேஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

திரு பாலு மகேந்திரா பேச்சில் வயதின் காரணமாக சற்று தடுமாற்றம் இருந்தாலும் கருத்தின் ஆழத்தில் குறைவில்லை.  அவருடைய பேச்சு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாகவே அமைந்தது என்றால் அது மிகை இல்லை.

இந்த விழாவில் என்னை கவர்ந்த ஒரு விஷயம் தமிழில் பழக்கத்தில் உள்ள பிற மொழிச் சொற்களை அப்படியே எடுத்துக்கொள்ளலாமா அல்லது எல்லாவற்றையும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமா என்ற விவாதம்தான். அவர்கள் பேச்சின் மையக் கருத்தாக அமைந்தது தேவையான இடங்களில் பிற மொழிச் சொற்களை அப்படியே எடுத்துக் கொள்ளலாம், கஷ்டப்பட்டு மொழி மாற்றம் செய்யத் தேவையில்லை என்பதுதான்.

எனக்கும் இந்தக் கருத்தில் முழு உடன்பாடுதான். ஆங்கில மொழி, இலத்தின், கிரேக்க, பிரெஞ்சு போன்ற மொழிகளில் இருந்து பெற்ற சொற்களில் இருந்துதான் இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.     ஆனால் நாம் தமிழை வாழ வைக்கிறோம் என்ற பெயரில் எல்லாவற்றையும் தமிழ்ப் படுத்துவதால்தான் தமிழ் இன்றைய தலைமுறையிடம் இருந்து விலகிக்கொண்டிருக்கிறது.

உதாரணமாக கம்ப்யூட்டர் என்பதை கணினி என்று மொழி பெயர்த்திருக்கிறோம். இதாவது பரவாயில்லை. லேப்டாப் என்பதை மடிக்கணினி என்று கூறுகிறோம்.  இப்போதெல்லாம் ஆங்கில வார்த்தைகளை டைப்  செய்தால் கம்ப்யூட்டர்  தானாகவே மொழி மாற்றம் செய்து தமிழில் கொடுத்துவிடுகிறது.  ஆனால் கொஞ்சம் அசந்தால் தவறான வார்த்தைகள் வந்து விடக்கூடும்.  என்னுடைய மடிக்கணினி சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கு பதிலாக என்னுடைய மடிக்கன்னி சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள் வந்துவிடக்கூடும்.  இன்றைய தலைமுறையினருக்கு பெரும்பாலும் தமிழில் ஆழமான சொல் வளம் இல்லாததால் எது சரியான வார்த்தை என்பதில் கூட சந்தேகம் வரலாம்.

'பிக்சல்' என்ற வார்த்தை Picture Element என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம். இதை எப்படி அல்லது ஏன் மொழி மாற்றம் செய்ய வேண்டும்.  அதே போல் கேமரா, ஷட்டர் போன்ற சொற்கள்.

அதனால் காலத்திற்கு ஏற்ப தமிழை வளர்ப்போம்.

நிகழ்ச்சியில் திரு மகேஷ் அவர்கள் அம்மாக்கள் தங்களை மம்மி என்று அழைக்க விரும்புவதை கலாய்த்தார்.  மம்மி என்றால் பதப்படுத்தப்பட்ட பிணம் என்று பொருள் என்று திரு பாலு மகேந்திரா கூறினார்.

இனி யாராவது தங்களை மம்மி என்று அழைக்க வேண்டும் என்று விரும்பினால் எகிப்து மம்மியை நினைத்து கொண்டு ஆசைப்படலாம்.

No comments:

Post a Comment