இன்று (29/12/2013) "Run for Yourself" (உங்களுக்காக ஓடுங்கள்) என்ற ஒரு மினி மாரத்தான் பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் சென்னை மெரீனாவில் நடைபெற்றது. இது உடல் நலத்தின் முக்கியத்தை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.
இதில் என் மகன் கோகுலும் சிறுவர்களுக்கான (12 வயது முதல் 16 வயது வரை) பிரிவில் கலந்து கொண்டான். மொத்த தூரம் 3 கிலோ மீட்டர். இவன் ஓடி முடிப்பதற்குள் எனக்கு மூச்சு வாங்கி விட்டது (வேறோண்டுமில்லை நானும் கூடவே ஓடினேன்).
ஆனாலும் என் 12 வயது மகன் முதலாவதாக வந்து விட்டான். அவசரப்பட்டு வாயை பிளக்காதிர்கள். அவனுக்கு முன்னால் 250 பேர் ஓடி 251 வது நபராக வந்து சேர்ந்தான் (வந்து சோர்ந்தான் என்பது பொருத்தமாக இருக்கும்). இருந்தாலும் 2000 பேருக்கு மேல் கலந்து கொண்ட போட்டியில் 251 வது இடமும் மதிப்புக்குரிய சாதனைதான் (என் மகன் என்பதால் மட்டுமல்ல) . 15 வயது 16 வயது சிறுவர்களுடன் 12 வயது சிறுவர்களும் போட்டி போட்டு ஓடியது, அதே போல் 60 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களும் உற்சாகமாக ஓடியதும் பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
நமக்காக ஓடுவோம், தினமும் ஓடுவோம் - வாழ்க்கையின் ஓரத்திற்கு ஓடாமல் கடற்கரை ஓரமும் சாலை ஓரமும் ஓடுவோம். நம் உடல் நலன் காப்போம்.
Let us Run for Ourselves.

No comments:
Post a Comment