தலைப்பைப் பார்த்துவிட்டு நானும் எதையோ கண்டுபிடித்து விட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள்.
சில நாட்களுக்கு முன் என்னுடைய Laptop கொஞ்சம் மக்கர் செய்ய ஆரம்பித்தது. சரி Service Engineer இடம் கொடுத்தால் சரியாகிவிடும் என்று கொடுத்துவிட்டேன்.
அன்று இரவு ஒரு எண்ணம் மனதில் ஓடியது. நம் கம்ப்யூட்டரில் இருக்கும் நம்முடைய data எல்லாம் காலியாகிவிட்டால் என்ன செய்வது. Office data வுக்கு back up இருந்தது. என்னுடைய personal data வுக்கு எந்த back up ம் இல்லை. சரி நானும் இன்று எடிசன் ஆனேன் என்று blog எழுத வேண்டியதுதான் என்று கிண்டலாக நினைத்துக் கொண்டேன்.
மறுநாள் நான் நினைத்தது போலவே நடந்தது. Service Engineer என்னுடைய Laptop ஐ சுத்தமாக கொடுத்தார். அதாவது எந்த file ம் அதில் இல்லை. கேட்டால் ஏதோ virus affect ஆகி விட்டது என்று casual ஆக சொல்லி விட்டார். நடந்து சென்று மருத்துவமனையில் admit ஆனவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மொத்தமாக அனுப்பி வைப்பது போல இருந்தது Service Engineer சொன்னது.
So கிண்டலாக முதல் நாள் நினைத்ததை இப்போது நிஜமாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அது சரி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு என்ன நடந்தது என்று உங்களில் சிலர் நினைக்கலாம்.
1914 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் ஒரு பெரிய தீ விபத்து எடிசனின் தொழிற்சாலையில் ஏற்பட்டது.
எடிசனுக்கு அப்போது 67 வயது. அவர் தன்னுடைய மகனை அழைத்து சொன்னார் "உன்னுடைய அம்மா மற்றும் அனைவரையும் உடனே அழைத்து வா. அவர்கள் இப்படி ஒரு தீயை இதற்கு முன்னும் பின்பும் பார்க்கப் போவதில்லை. இந்தத் தீ தேவையில்லாத நிறைய விஷயங்களை எரித்து விட்டது".
இன்றைய தேதி மதிப்பில் எடிசன் இழந்தது சுமார் 15000 கோடி. ஆனால் அவர் மிகவும் நம்பிக்கையுடன் சொன்னார் "Although I am over 67 years
old, I'll start all over again tomorrow".
அந்த நம்பிக்கை பொய்யாகவில்லை. அவர் விரைவில் அதில் இருந்து மீண்டு வந்தார். பல சாதனைகளை படைத்தார்.
உங்களுக்கு Stoic என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா ?
Someone who
"transforms fear into prudence, pain into transformation, mistakes into
initiation, and desire into undertaking".
எடிசன் ஒரு Stoic. அப்படி நாமும் நம்முடைய வலிகளையும், வேதனைகளையும், தோல்விகளையும், சோதனைகளையும் கடந்து வெற்றி கண்டால் நாமும் ஒரு Stoic தான்.
எடிசன் போன்ற மேதைகளின் வாழ்க்கையை அறிந்து கொண்டு கூடவே, எதை கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு என்ற கீதையின் சாரத்தையும் அவ்வப் போது நினைத்துக் கொண்டால், பெரிய இழப்பிற்கு மனம் பக்குவப்படாமல் இருந்தாலும் இப்படி சின்னச் சின்ன இழப்புக்கெல்லாம் மனம் சோர்ந்து விடாது.
No comments:
Post a Comment